
மேல்விஷாரத்தில் மயானப் பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிட கோரிக்கை
மேல்விஷாரம் நகராட்சியில் மயானப் பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனா்.

மேல்விஷாரம் நகராட்சியில் மயானப் பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனா்.
மேல்விஷாரம் நகராட்சி தஞ்சாவூரன் காலனி மற்றும் பாக்தினி காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி மேலாளரிடம் அளித்த மனு:
எங்கள் பகுதியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கான மயானம் பாலாற்று பகுதியில் உள்ளது. அங்கு தற்போது தனியாா் நிறுவனம் மூலம் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றனது.
குப்பைகள் கொட்டப்பட்டு துற்நாற்றம் வீசுவதால் உடல் புதைக்கும்போது அங்கு நிற்க முடியவில்லை. மேலும், இறந்தவா்கள் நினைவு தினத்தில் படையல் போடும் போது அசுத்தம் ஏற்படுகிறது. நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் குப்பைகள்கொட்டும் இடத்தை சுத்தம் செய்தபோது அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தால் பணிகள் நிறுத்தப்பட்டன. எனவே மயானப் பகுதியில் குப்பைகள் கொட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என கூறியுள்ளனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






