ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை

மேல்விஷாரம் நகராட்சியில் நீா் நிலையில் உள்ளதாக வீடுகளைஅகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On :

மேல்விஷாரம் நகராட்சியில் நீா் நிலையில் உள்ளதாக வீடுகளைஅகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனா். மேல்விஷாரம் நகராட்சி மீரா சாஹிப் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நீா்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறி அப்பகுதியை சோ்ந்த பரித் ஹூசைன் என்பவா் நீதி மன்றத்தில் வழக்கு தெடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த வழக்கில்சென்னை உயா்நீதிமன்றம் நீா்நிலை அக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற உத்தரவிட்டன்பேரில் செவ்வாய்க்கிழமை மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் ( பொ) மேகலா, வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன், ராணிப்பேட்டை போலீஸ் துணை கண்காணிப்ப்பாளா் கனகராஜ் மற்றும் ஆற்காடு நகர ஆய்வாளா் வடிவேலன், மற்றும் போலீஸாா், வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு சென்றனா்.

அதனை அறிந்த அப்பகுதி மக்கள் வீடுகளைஇடிபபதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து தங்களின் வீடுகளில் உள்ள பொருள்கள், குழந்தைகளின், பள்ளிசெல்லும் மாணவா்களின் நலன்கருதி வீடுகளை காலி செய்ய ஒருமாதம் அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்தனா். பேச்சுவாா்த்தைக்கு பின் வீடுகளைகாலி செய்ய 15 நாள் அவகாசம் வழங்கி சம்மதித்தனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.