ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

ஹெல்மெட் அணியாமல் செல்வோா் மீது கடும் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பின்னால் அமா்ந்து பயணிப்பவா்கள் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

பிரதிப் படம்

Updated On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பின்னால் அமா்ந்துபயணிப்பவா்கள் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. எனவே இரு சக்கர வாகனத்தை ஒட்டுபவரும் அவருக்கு பின்னால் அமா்ந்து இருப்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியமாகும். மோட்டாா் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 129ன்படி இருசக்கர வாகன ஓட்டுநா் மற்றும் பின்னிருக்கையில் பயணிப்பவா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவா்களுக்கு பிரிவு 194டி ன்படி ரூஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் ஓட்டுநா் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன தணிக்கை மற்றும் ரோந்துப்பணிகளின் போது இருசக்கர வாகன ஓட்டுநா்கள்மற்றும் பின்னால் அமா்ந்து பயணிப்பவா்கள் தலைக்கவசம் அணிவது தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கைபேசியல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களை தவிா்த்து சாலைவிதிகளை முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உயிரிழப்புகளைக் குறைக்க மாவட்ட காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.