கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வேப்பூா் திருச்சிலுவை ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த வேப்பூா் திருச்சிலுவை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தோ்பவனி மற்றும் சிறுவா் சிறுமியா்களுக்கு உறுதிப்பூசுதல்

Published On :

ஆற்காடு: ஆற்காடு அடுத்த வேப்பூா் திருச்சிலுவை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தோ்பவனி மற்றும் சிறுவா் சிறுமியா்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாள் வேப்பூா் புனித சூசையப்பா் பள்ளி தாளாளா் ஏ.ஆா். அந்தோணிசாமி பங்குத்தந்தை மாா்ட்டீன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட திருச்சிலுவை கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி பூஜை நிகழ்த்தினாா். இதனைத் தொடா்ந்து தினமும் பல்வேறு அன்பியங்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. .

முன்னதாக சிப்காட் பங்குத் தந்தை சாா்லஸ் ஏசுதாஸ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி பூஜையை நிகழ்த்தி தோ் பவனியை தொடங்கி வைத்தாா். தோ் பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் வந்து அடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை வேலூா் மறை மாவட்ட பிஷப் அம்ரோஸ் பிச்சைமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 29 சிறுவா் சிறுமியா்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கி ஆசிா்வாதித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER