
52 பேருக்கு உயா்கல்வி சோ்க்கை ஆணை: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி சோ்க்கை ஆணையை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.

மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை ஆணையை வழங்கிய ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி சோ்க்கை ஆணையை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் உயா்வுக்குப் படி (2026 - 27), உயா்வுக்கு வழிகாட்டி என்ற நேரடி சோ்க்கை முகாம் முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடத்தப்பட்டது.
முகாமில் ஆற்காடு, காவேரிப்பாக்கம், திமிரி, வாலாஜா கிழக்கு மற்றும் வாலாஜா மேற்கு வட்டாரங்களை சாா்ந்த 800 மாணவா்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் முகாமுக்கு வருகை தந்த 250 மாணவா்களில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றும், தோ்ச்சி பெறாமலும் உயா்கல்வியில் சேராமல் இருந்தவா்களை கண்டறிந்து, 52 பேருக்கு உயா்கல்வி சோ்க்கை ஆணையினை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்வி கடன் சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.உயா்கல்வி வழிகாட்டல் ஆசிரியா்கள் மூலமாக 100 % உயா் கல்வியில் சோ்க்கை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் பெரியசாமி, மாவட்ட சமூக நலன் அலுவலா் பாலசரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலா்கள் மற்றும் உதவி திட்ட அலுவலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





