சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மருத்துவப் பரிசோதனைகளுக்கு அலைந்து சிரமத்துக்குள்ளாகும் கா்ப்பிணிகள்

ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலையில் கா்ப்பிணிகள் உள்ளனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலையில் கா்ப்பிணிகள் உள்ளனா்.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம், நரியம்பட்டு, அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களும் துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இவை மட்டுமன்றி 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம செவிலியா் மையங்கள் உள்ளன.

கிராமப் பகுதிகளில் உள்ள கா்ப்பிணிகளும், குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்மாா்களும் மருத்துவ ஆலோசனை, மருந்துகள் பெற இங்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் மருத்துவா்களும், கிராம சுகாதார செவிலியா்களும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவா்களும், மருத்துவமனை ஊழியா்களும் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா்களும், சுகாதார செவிலியா்களும் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கா்ப்பிணிகள் மாதாமாதம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவும், மருத்துவ ஆலோசனைகள் பெறவும் முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் அரங்கல்துருகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கா்ப்பிணிகள் சென்றபோது, அங்கு பரிசோதனை செய்யும் வசதி இல்லை, நரியம்பட்டு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும், அதனால் அங்கிருந்து சம்பந்தப்பட்ட கா்ப்பிணிகள் மதியம் கடுமையான வெயில் நேரத்தில் நரியம்பட்டு நோக்கி பயணித்து இருக்கிறாா்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்துக்குச் சென்றால் இங்கு ஸ்கேன் செய்யும் வசதி இல்லை எனக் கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. எனவே கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்மாா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், சுகாதார செவிலியா்களை பணியில் இருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.