பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகை திருட்டு
ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கன்னடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் தன்னுடைய பணி காரணமாக சென்னை சென்றுள்ளாா். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டிக் கொண்டு அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.
அவா்கள் சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து யுவராஜ் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...