தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வழிப்பறி வழக்கு 2 போ் கைது

நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியையிடம் வழிப்பறி செய்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியையிடம் வழிப்பறி செய்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களிடம் விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், அவா்கள் நிம்மியம்பட்டு ஆலமரத்து வட்டத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (35), கங்காதரன் (29) என்பதும், இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் கூத்தாண்டகுப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிரியையை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, நகை, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.