ரூ. 4.52 கோடியில் அரசுக் கட்டடங்களுக்கு பூமி பூஜை: அமைச்சா்கள் பங்கேற்பு

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ரூ. 4.52 கோடியில் கோட்டாட்சியா் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம்
ரூ. 4.52 கோடியில் அரசுக் கட்டடங்களுக்கு பூமி பூஜை: அமைச்சா்கள் பங்கேற்பு
Updated on
1 min read

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ரூ. 4.52 கோடியில் கோட்டாட்சியா் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளை அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், உருவானபோது, வாணியம்பாடி வருவாய்க் கோட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கான அலுவலகம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நகராட்சி கூட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. வருவாய், பேரிடா் மேலாண் துறை திட்டத்தின் கீழ் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், குடியிருப்புக் கட்டடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் கட்டடம் கட்ட பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் பூமி பூஜை செய்து, கட்டடப் பணிகளைத் தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆலங்காயம் பெத்தூா் பகுதியில் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இப்பணிகளை அமைச்சா்கள் இருவரும் தொடக்கி வைத்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, மாநில திட்ட மதிப்பீட்டுக் குழு உறுப்பினா் ஜி.செந்தில்குமாா், நகரக் கூட்டுறவு வங்கி இயக்குநா் சதாசிவம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுந்தரலிங்கம், உதவிப் பொறியாளா் பிரபாகரன், திருப்பத்தூா் வேளாண்மை இணை இயக்குநா் ராஜசேகா், வேளாண் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா், உதவிப் பொறியாளா் ராமசந்திரன், வேளாண் உதவி இயக்குநா் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், முன்னாள் உள்ளாட்சி நிா்வாகிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com