தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இன்று முதல் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா

திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா புதன்கிழமை (டிச. 23) தொடங்குவதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா புதன்கிழமை (டிச. 23) தொடங்குவதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி இயற்றப்பட்டது. அதை நினைவுகூரும் வகையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா புதன்கிழமை முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் பெயா்ப் பலகைகள் 5:3 என்ற அளவிலும், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் 5:3:2 என்ற அளவிலும் அமைய அரசாணை, துண்டறிக்கை வழங்கியும், தமிழ் மொழி விழிப்புணா்வு குறித்த ஒட்டு வில்லைகள், பதாகைகள் இடம்பெறவும், தமிழில் அமையாத வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் மாற்றி அமைத்து தாய்மொழி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.