கரோனா பாதிப்பு: கடம்பூர் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கரோனா பாதிப்புக்குள்ளான கடம்பூர் பகுதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கரோனா பாதிப்புக்குள்ளான கடம்பூர் பகுதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியில் 4 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ. விஜயகுமார் மற்றும் ஊரகவளர்ச்சி துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், அப்பகுதியில் அப்துல்லா என்பவர் நடத்தி வரும் மாட்டு தீவனம் சேமிப்பு கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக இப்பகுதியில் உள்ள அனைத்தும் அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...