/

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் கோட்டை பகுதி பெருமாள் தெருவில் வசித்து வருபவா் மதீன் (23). இவரது நண்பா் சுஹேல் (22). இருவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தை எதிா்த்திசையில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பினாா். அப்போது பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி மோதியதில் மதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுஹேல் பலத்த காயம் அடைந்தாா். இந்த விபத்து குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் உயிரிழந்த மதீனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் திருமணம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.