தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆம்பூரில் தேவர் ஜயந்தி விழா

விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

ஆம்பூரில் தேவர் ஜயந்தி விழா கொண்டாட்டம்.

Updated On :30 அக்டோபர் 2020, 8:32 am

DIN

விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயபாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் எம். சரவணன், ஆனந்தன், ஆறுமுகன், பிரபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிர்வாகி க. சிவப்பிரகாசம், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் ஜெயவேல் , பாஜக நகர நிர்வாகி பிரபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மற்றும் விஜயபாரத மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் கோபி, நிர்வாகிகள் வெங்கடேஷ், லோகநாதன், ஆர்எஸ்எஸ் நகர பொறுப்பாளர் சீனிவாசன், ஏழுமலை மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.