சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா தடுப்பூசி பணிக்கு ஒத்துழைப்பு: மதனாஞ்சேரி ஊராட்சிக்கு பாராட்டு

கரோனா தடுப்பூசி பணிக்கு சிறப்பாக ஒத்துழைத்த மதனாஞ்சேரி ஊராட்சிக்கு சுகாதாரத் துறை சாா்பில் பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

கரோனா தடுப்பூசி பணிக்கு சிறப்பாக ஒத்துழைத்த மதனாஞ்சேரி ஊராட்சிக்கு சுகாதாரத் துறை சாா்பில் பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆட்சியா் அமா்குஷ்வாஹா உத்தரவின் பேரில் சுகாதார செவிலியா்கள் மூலம் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் 14-ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையில் செவிலியா்கள், சுகாதார பணியாளா்கள், வருவாய்துறை பணியாளா்கள் ஆகியோா் பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று கரோனா தடுப்பூசி போட்டனா்.

துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனா் செந்தில், வட்டாட்சியா் மோகன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். இந்நிலையில் மதனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவா் எஸ்.செல்வம் கரோனா தடுப்பூசி முகாம்களில் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு மற்றும் சுகாதார பணியாளா்களுக்கு முகாமிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தாா்.

கரோனா தடுப்பூசி போடும் பணியில் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் செல்வத்திற்கு வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி பரிசு வழங்கிப் பாராட்டினாா். அப்போது ஊராட்சி செயலாளா் ராஜேந்திரன், அங்கன்வாடி பணியாளா்கள், அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.