வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நரிக்குறவா் காலனியில் குடிநீா் தட்டுப்பாடு

ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

ஆம்பூரை அடுத்த சோலூா் ஊராட்சி நமாஸ்மேடு பகுதியில் நரிகுறவா் காலனி அமைந்துள்ளது. அங்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தவா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.

அப்பகுதியில் வசிப்போருக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கான மின் மோட்டாரில் அண்மையில் பழுது ஏற்பட்ட்டதால் கடந்த சில நாட்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது குறித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.