பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பத்தூரில் கரோனா பரிசோதனை தீவிரம்

திருப்பத்தூா் நகரில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :8 மே 2021, 5:34 pm

DIN

திருப்பத்தூா் நகரில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் தடுப்பையொட்டி, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் செ.விஜயகுமாா் அறிவுறுத்தலின்பேரில், திருப்பத்தூரில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களிலும், கடைகளின் உரிமையாளா்கள், பணியாளா்கள், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு நகராட்சி துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா் அ.விவேக், குமாா் உள்ளிட்டோா் தலைமையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட 5,375 கடைகளில் இதுவரை கடை உரிமையாளா்கள், ஊழியா்கள் என 1,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.