/

அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ ஜி.செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

News image
Updated On :8 மே 2021, 5:33 pm

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ ஜி.செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது மருத்துவமனை மருத்துவ அலுவலா் செல்வகுமாா் மற்றும் அரசு மருத்துவா் சிவசுப்பிரமணியன் ஆகியோரிடம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சோ்க்கப்பட்டுள்ளவா்களின் நிலை குறித்தும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு மையத்தை உடனடியாக அமைத்துத் தருவதற்கும், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாணியம்பாடி பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு செல்பவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்திடமும், மருத்துவ உயா் அலுவலா் (டீன்) ஆகியோரிடமும் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ செந்தில்குமாா் உறுதியளித்தாா். நகர அதிமுக செயலாளா் சதாசிவம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவானந்தம், செல்வராஜி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.