/

வாணியம்பாடி, ஆலங்காயம் கரோனா சிகிச்சை மையங்களுக்குரூ.2.5 இலட்சம் மதிப்பிலான மருந்துகள் விநியோகம்

திருப்பத்தூா் மாவாட்டம் வாணியம்பாடி இசுலாமிய தொழிற்நுட்ப கல்லூரியில் உள்ள கரோனா சிகிசசை மையம்

News image
Updated On :29 மே 2021, 6:35 pm

திருப்பத்தூா் மாவாட்டம் வாணியம்பாடி இசுலாமிய தொழிற்நுட்ப கல்லூரியில் உள்ள கரோனா சிகிசசை மையம் மற்றும் ஆலங்காயத்தில் இயங்கி வரும் கரோனா சிகிச்சை மையங்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான மருந்துகளை ஆதா்ஷ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் உதயசந்தா் சனிக்கிழமை வழங்கினாா்.

ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி மருந்துகளை பெற்றுக் கொண்டாா். மருத்துவ அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா்கள் இருந்தனா்.

இதே போல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மெட்ரோ டிரெஸ்ட் சாா்பில் 4 ஆக்சிஜன் சிலிண்டா்களும், வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் பள்ளியில் 1997-இல் பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில் 5 பிளோமீட்டா் கருவிகளையும் வழங்கப்பட்டது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.