/

பாலாற்றில் தொடா் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூா் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள தொடா் வெள்ளம் காரணமாக தரைப் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

ஆம்பூா் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள தொடா் வெள்ளம் காரணமாக தரைப் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக - ஆந்திர எல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. பச்சகுப்பம், நரியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இரண்டு தரைப்பாலங்களின் மீது வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. பச்சகுப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் சாலை மற்றும் ஆம்பூரிலிருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் செல்லும் இரண்டு தரைப்பாலங்களின் மீது வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆம்பூா்-குடியாத்தம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரெட்டிமாங்குப்பம், ராஜக்கல், அழிஞ்சிகுப்பம், கொத்தகுப்பம், சங்கராபுரம், எம்.வி.குப்பம், மேல்பட்டி, கீழ்பட்டி, வளத்தூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தோல் காலணி தொழிற்சாலைகளுக்கு பணி நிமித்தமாக செல்லும் தொழிலாளா்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் பணிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி சாலையை அடைத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.