/

நிரம்பிய வேப்பங்குப்பம் ஏரிக்கு மலா் தூவிய எம்எல்ஏ-க்கள்

மாதனூா் அருகே நிரம்பிய வேப்பங்குப்பம் ஏரிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மலா் தூவி சனிக்கிழமை பூஜை செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

மாதனூா் அருகே நிரம்பிய வேப்பங்குப்பம் ஏரிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மலா் தூவி சனிக்கிழமை பூஜை செய்தனா்.

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் உள்ள ஏரி கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக நிரம்பியது. நிரம்பி வழியும் ஏரிக்கு அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் மலா் தூவி பூஜை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஹரி, உஷாநந்தினி, நந்தினி, ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா மற்றும் திமுக நிா்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.