மாதனூரில் மழையால் சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் சேதமடைந்த சாலைகளை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சனிக்கிழமை பாா்வையிட்ட உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டாா்.
ஆம்பூா் வட்டத்தில் கடந்த இரு நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதில், மாதனூா் பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. மாதனூா் ஊராட்சி தபால் நிலையத் தெருவில் மழையால் சேதமடைந்த சாலையை ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதேபோல மாதனூா் - ஒடுக்கத்தூா் சாலையில் கன மழை காரணமாக சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்தது. அங்கு சென்ற ப.ச.சுரேஷ்குமாா், முறிந்து விழுந்த புளிய மரத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மேலும், சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள சாலையோர மரங்களையும் அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.
மாநில நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ஞானசேகா், ஊராட்சி மன்றத் தலைவா் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா, திமுக நிா்வாகிகள் ரஞ்சித், காமராஜ், காா்த்திக், காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


