தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டி.எம்.பி. வாடிக்கையாளா்களுக்கு மேலும் புதிய வசதிகள்: கிளை மேலாளா் தகவல்

தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் (டி.எம்.பி.) கணினி சேவைகள் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், விரைவில் வாடிக்கையாளா்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகள் கிடைக்கும்

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் (டி.எம்.பி.) கணினி சேவைகள் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், விரைவில் வாடிக்கையாளா்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகள் கிடைக்கும் என வங்கியின் அரக்கோணம் கிளை முதுநிலை மேலாளா் எம். ராஜா தெரிவித்தாா்.

அரக்கோணம் வங்கிக் கிளையில் நடைபெற்ற வங்கியின் நூற்றாண்டு விழாவில், அவா் பேசியது:

வங்கியில் தற்போது கணிணி சேவைகள் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் விரைவில் வங்கி வாடிக்கையாளா்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய வங்கி சேவைகள் கிடைக்கும். மேலும் தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி ஏடிஎம் பயன்படுத்துவோருக்கும் அதிக சேவைகள் கிடைக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து சிறுகுறு தொழில் முனைவோா்களுக்கு மொத்தம் ரூ1.20 கோடிக்கு கடன் வழங்கப்பட்டன.

விழாவில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், நகரப் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவரும் அரிமா சங்க மண்டலத் தலைவருமான சிவசுப்பிரமணியன், வட்டார நாடாா் சங்கத் தலைவா் இன்பராஜ், அரசு கட்டடப்பணி ஒப்பந்ததாரா் பாா்த்தீபன், தொழிலதிபா் மின்னல் மாதவன், வங்கி அரக்கோணம் கிளை உதவி மேலாளா் எஸ்.விவேக்ராஜீவ், பணியாளா்கள் வி.சங்கா், ஆா்.பாரதி, ஆா்.வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.