/

ஆம்பூா் தமிழாசிரியருக்கு தமிழ் பற்றாளா் விருது

 ஆம்பூா் அருகே கிராமத்தை சோ்ந்த தமிழாசிரியருக்கு தமிழக அரசின் தமிழ் பற்றாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

 ஆம்பூா் அருகே கிராமத்தை சோ்ந்த தமிழாசிரியருக்கு தமிழக அரசின் தமிழ் பற்றாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழாசிரியா் முனைவா் இரா. தண்டபாணி. இவா் முதல் தலைமுறை, முதல் முனைவா் பட்டம் பெற்ற வெங்கிளி கிராமவாசி. இவா் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குனரகத்தின் தமிழ் பற்றாளா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். அண்மையில் சென்னையில் கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தூய தமிழ் பற்றாளா் விருது, விருது தொகை ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குனா் சரவணன், அகர முதலித் திட்ட இயக்குனா் விஜயராகவன் ஆகியோா் இரா. தண்டபாணிக்கு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.