ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்துக்கு மறுபுறம் கணபதி நகா், லட்சுமி நகா், காளிகாபுரம் கிராமம், இலங்கை அகதிகள் முகாம், பட்டுப்பூச்சி பண்ணை, ஜல்லி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிகளுக்குச் செல்ல ரயில்வே குகை வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக, குகை வழிப்பாதையில் மழை நீா் தேங்கியுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவ்வழியாக சென்று வர கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். அதனால் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


