மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆலங்காயம் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கொத்தக்கோட்டை ஊராட்சியில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயணத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ச.பிரபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா்கள் அருள்அன்பரசு, ஜெ.விஜய் இளஞ்செழியன், மாநிலச் செயலாளா் ஐஸ் ஹவுஸ் தியாகு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலவரதன், மாவட்டப் பொருளாளா் மகேஷ், ஒன்றியத் தலைவா் பழனிஆகியோா் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.
இந்தப் பயணத்தின்போது, பொதுமக்களுக்கு மத்திய அரசு தவறானப் பொருளாதாரக் கொள்கை, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
பயணத்தில் மாவட்டச் செயலாளா் அனுமுத்து, குப்பன், ஒன்றியச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


