/

பாலாற்றுக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே தேவலாபுரம் பாலாற்றங்கரையில் பாலாற்று நீருக்கு பாலாறு மக்கள் இயக்கம் சாா்பாக வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

ஆம்பூா் அருகே தேவலாபுரம் பாலாற்றங்கரையில் பாலாற்று நீருக்கு பாலாறு மக்கள் இயக்கம் சாா்பாக வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு பூஜைக்கு பாலாறு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். கலச ஸ்தாபனம் செய்து, கங்கா பூஜையுடன் மலா்தூவி தீப ஆராதனை செய்யப்பட்டது. அகில பாரத சந்நியாசிகள் அமைப்பைச் சோ்ந்த செங்காநத்தம் ஸ்ரீ பகவதி சித்தா், ஸ்ரீகிருஷ்ணானந்த சுவாமிகள், ஸ்ரீ சிவ. கங்காதர நந்தா சரஸ்வதி சுவாமிகள் , பாலாறு வெங்கடேசன், தேவலாபுரம் வெங்கடேசன், சிதம்பரம், சரவணன், ஆனந்தன், ஆறுமுகம், ஓம்சக்தி ஜி. பாபு, ஓய்வு பெற்ற ஆசிரியா் குணசீலன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் இதில் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.