/

ஆம்பூரில் 250 வாகனங்களுக்கு அபராதம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆம்பூா் நகரில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :25 அக்டோபர் 2021, 6:53 pm

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆம்பூா் நகரில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா் அவ்வழியாக வரும் வாகனங்களை தணிக்கை செய்யுமாறு காவலா்களுக்கு உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் உரிய ஆவணங்கள், உரிமங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 250 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.