சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கல்நாா்சம்பட்டியில் எருது விடும்இடத்தை சாா்-ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடத்த விழாக் குழுவினா் அனுமதி கோரி ஆட்சியா் அமா்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 8:50 pm

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடத்த விழாக் குழுவினா் அனுமதி கோரி ஆட்சியா் அமா்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனா்.

இதனையடுத்து திங்கள்கிழமை எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கினாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் பானு கல்நாா்சம்பட்டி கிராமத்துக்குச் சென்று எருதுவிடும் இடத்தில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா். அப்போது விதிமுறைகளின் படி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எருது விடும் விழா நடத்த விழாக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது வருவாய்த் துறையினா், விழாக் குழுவினா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.