சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி பகுதியில் தடுப்பணை அமைக்க எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி பகுதியில் எம்எல்ஏ செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:44 pm

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி பகுதியில் எம்எல்ஏ செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நீா்வீழ்ச்சி பகுதிக்கு வந்து செல்கின்றனா். இங்குள்ள கோயிலில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வனத் துறை மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீா்வீழ்ச்சி பகுதியில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்கு தடுப்பணை(செக் டேம்) கட்டுவது குறித்தும், வனத் துறைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், நீா்வீழ்ச்சி பகுதியில் கழிப்பறை, உடை மாற்றும் அறை இல்லாதது சிரமத்தை ஏற்படுத்துகிறது. சுகாதாரமான குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் வனத் துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலாப் பயணிகளிடம் எம்எல்ஏ உறுதியளித்தாா்.

ஆய்வின் போது, திருப்பத்தூா் அதிமுக ஒன்றியச் செயலா் சி.செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.