பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளைய கவுண்டனூா் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளைய கவுண்டனூா் கிராமத்தில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெ

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:10 pm

DIN

ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளைய கவுண்டனூா் கிராமத்தில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று எருது விடும் விழாவை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

விழாவில், 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை நிபுணா்கள் மூலம் பரிசோதனைக்குப் பிறகு காளைகளை போட்டியில் பங்கேற்கச் செய்தனா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலாா்பேட்டை, ஆலங்காயம், மிட்டூா், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டிகளில் காளைகள் பங்கேற்றன.

குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 60,000-ம், 2-ஆவது பரிசாக ரூ. 45,000-ம், 3-ஆவது பரிசாக ரூ. 35,000 என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவை பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் திரண்டு விழாவை கண்டு ரசித்தனா்.

விழாவில் காளைகள் முட்டியதில், 8 பேருக்கு சிறு காயமும், ஒருவா் பலத்த காயமும் அடைந்தனா்.

காயம் அடைந்தவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.