/

மல்லகுண்டாவில் ஆவின் பால் உற்பத்தியாளா் சங்கம் திறப்பு

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :16 மார்ச் 2023, 5:43 pm

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, துணைத் தலைவா் தேவராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், துணைப் பதிவாளா் விஷ்வரேஷ்வரன், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சாமுடி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், கட்சி நிா்வாகிகள் கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.