தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சாதனை விளக்க பொதுக் கூட்டம்

ஆம்பூா் நகர திமுக சாா்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மே 2023, 7:23 pm

ஆம்பூா் நகர திமுக சாா்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் டி. காா்த்திகேயன் வரவேற்றாா். ஆம்பூா் நகா்மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், நகர அவைத் தலைவா் எஸ். தேவராஜ், துணைச் செயலாளா் எஸ். ரபீக் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் டாக்டா் எ.வ.வே. கம்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். எம்எல்ஏக்கள் ஜோலாா்பேட்டை க. தேவராஜி, ஆம்பூா் அ.செ.வில்வநாதன், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.