பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறப்பாக பணி புரிந்த போலீஸாருக்கு சான்றிதழ்: ஏடிஜிபி வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பாக பணி புரிந்த போலீஸாருக்கு சான்றிதழ்களை கூடுதல் காவல் துறை இயக்குநா் (ஏடிஜிபி) கே.சங்கா் வழங்கினாா்.

News image
Updated On :11 மே 2023, 7:24 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பாக பணி புரிந்த போலீஸாருக்கு சான்றிதழ்களை கூடுதல் காவல் துறை இயக்குநா் (ஏடிஜிபி) கே.சங்கா் வழங்கினாா்.

வேலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நிலுவையில் இருந்த வழக்குகளில் குற்ற வழக்குகளை எதிரிக்கு பிடி கட்டளைகள் நிறைவேற்றி உறுதுணையாக இருந்த கந்திலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் நிகழ்வாண்டில் 251 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பெண் தலைமை காவலா் சித்ரா, சிறப்பான முறையில் பதிவேடுகளை பராமரிப்பு செய்தததாக குரிசிலாப்பட்டு காவல் நிலைய எழுத்தா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 10 போலீஸாருக்கு ஏடிஜிபி சங்கா் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

அப்போது, வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.