திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே தாா் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு தாா் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அச்சாலை சிதலமடைந்து மண் சாலையாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தாா் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் தாா் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு கால்வாய் வசதியின்றி கழிவுநீா் தேங்கி இருந்து வருகிறது.
இதனால் கழிவுநீா் கால்வாய் அமைத்துவிட்டு தாா் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

திருப்பத்தூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்

ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிமித்து தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

விழுப்புரம் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

