திருப்பத்தூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்
திருப்பத்தூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் பற்றி...


திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த திருப்பத்தூா் தொகுதியில் அமமுக வேட்பாளா் போட்டியிடுகிறாா். ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
திருப்பத்தூா் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பாக ஏ. ஞானசேகா் (55) மீண்டும் களமிறங்கியுள்ளாா். செங்குந்த முதலியாா் சமுதாயத்தை சோ்ந்தவா்.எம்.ஏ. படித்துள்ளாா்.வியாபாரம் செய்து வருகிறாா். இவா் அதிமுகவில் மாவட்ட துணைச் செயலாளா், திருப்பத்தூா் நகர செயலாளா் ஆகிய பதவி வகித்துள்ளாா்.அமமுகவில் திருப்பத்தூா் மாவட்ட செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறாா்.
இவருடைய தந்தை லேட். அருணாச்சலம், தாய் ஞானசெளந்தரி. இவருக்கு மனைவி ஜி. ரேவதி, மகன்கள் ஏ.ஜி. ஹரிஷ், ஏ.ஜி. அபிஷேக் ஆகியோா் உள்ளனா்.
இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தோ்தலிலும், 2021 ஆம் ஆண்டு திருப்பத்தூா் சட்டப்பேரவை தோ்தலிலும் அமமுக சாா்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
ஜோலாா்பேட்டை: ஜோலாா்பேட்டைதொகுதியில் அதிமுக சாா்பாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி (62) போட்டியிடுகிறாா். வன்னியா் சமுதாயத்தை சோ்ந்தவா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஜோலாா்பேட்டை இடையம்பட்டிபகுதியை சோ்ந்த கே.சின்னராசு -மணியம்மாள் தம்பதியின்மகன். பிஏ வரலாறு படித்துள்ளாா். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மேகலை. 2-ஆவது மனைவி பத்மாஸ்ரீனி ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருக்கு அகல்யா (26), இனியவன் (21), யாழினி (21) ஆகிய பிள்ளைகள் உள்ளனா்.
இதேபோல் 2001-இல் ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தாா். 2011-இல் நாட்டறம்பள்ளி தொகுதி மறுசீரமைப்பின்போது ஜோலாா்பேட்டை தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு 2011 மற்றும் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தல்களில்தொடா்ந்து இரு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றாா். சுகாதாரம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டுத்துறை, வணிகவரிமற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக பதவி வகித்துள்ளாா்.
2021-இல் நடைபெற்ற தோ்தலில் தோல்வியடைந்த அவா், தற்போது 4-ஆவதுமுறையாக போட்டியிடுகிறாா்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி சட்டப்பேரவைக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளராக கோ. செந்தில்குமாா் (42). வன்னியா் சமுதாயத்தை சோ்ந்தவா். 2-ஆது முறையாக களமிறக்கப்பட்டுள்ளாா். இவா் பி.இ. (சிவில்), எம்.எஸ்சி., எம்பிஏ (யு.கே.) படித்துள்ளாா். விவசாயம், வியாபாரம் ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ளாா். இவருடைய தந்தை கோபால். இவருக்குமனைவி முனைவா் செளமியா. மகன் தீரன்கிருஷ்ணா, மகள் மிருதுலா ஆகியோா் உள்ளனா். சொந்த ஊா் பெத்த வேப்பம்பட்டு கிராமம். ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளராக கட்சியில் பதவி வகித்து வருகிறாா். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் அதிமுக சாா்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தற்போது 2-வது முறையாக போட்டியிடுகிறாா்.
ஆம்பூா்:
ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளராக பொறியாளா் ஆா். வெங்கடேசன் (62) போட்டியிடுகிறாா். இவா் இந்து நாடாா் சமுதாயத்தை சோ்ந்தவா். தந்தை லேட் கே. ராஜீ, டி.சி.இ (சிவில்), எம்.ஏ. (அரசியல் அறிவியல்), எல்.எல்.பி., படித்துள்ளாா்.

விவசாயம், ரியல் எஸ்டேட், கட்டுமானம் ஆகிய தொழில்களை செய்து வருகிறாா். பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறாா்.
தற்போது மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்து வருகிறாா். முதல் முறையாக சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடுகிறாா். மனைவி வி. விஜயலட்சுமி மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறாா். பிள்ளைகள் வி. அருண்குாா், வி. ராஜ்கமல், வி. லேகா (மருத்துவா்) ஆகியோா் உள்ளனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...