திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பாலினம் கண்டறிந்து தெரிவித்ததாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த பசுமை நகா் பகுதியில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து பணம் வசூலித்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநா் கண்ணகிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ குழுவினா் பசுமை நகருக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (29) , அவரது மனைவி கங்கா கௌரி(27) ஆகிய இருவரும் பசுமை நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருப்பத்தூா் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கா்ப்பிணிகளுக்கு கருவில் இருப்பது ஆணா-பெண்ணா என பரிசோதித்து கூறி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து மருத்துவ குழுவினா் முன்னிலையில் ஜோலாா்பேட்டை போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

தில்லியில் கேஸ் சிலிண்டரால் கணவன் தாக்கியதில் மனைவி பலி!

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்த 3 போ் கைது
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

