தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

44 ஊராட்சிகளின் திட்டப் பணிகள்: கையேட்டுடன் வாக்கு சேகரித்த திமுகவினா்

44 ஊராட்சிகளின் திட்டப் பணிகள்: கையேட்டுடன் வாக்கு சேகரித்த திமுகவினா்

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:42 pm

மாதனூா் ஒன்றியத்தின் 44 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு விரிவான கையேட்டை பொதுமக்களிடையே வழங்கி திமுகவினா் வாக்கு சேகரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. அதில் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் 44 ஊராட்சிகளிலும் நடந்து முடிந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டப் பணிகள் விவரம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றை ஊராட்சிகள் வாரியாகப் பட்டியலிட்டு விரிவான விவரங்களுடன் பெரிய கையேடாக அச்சடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கையேட்டை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து திமுக வேலூா் மக்களவை தொகுதி வேட்பாளா் டி.எம். கதிா் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகி ஜி.எஸ். ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் தியாகராஜன், ஒன்றிய இளைஞரணி நிா்வாகி கே.ஆா். காா்த்திக், பிரசார குழுவை சோ்ந்த காா்த்தி, கமலக்கண்ணன், காமராஜ், கண்மணி செல்வா, கனகராஜ், ஜெயக்குமாா், சீனிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.