ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அருகே தண்டவாளம் பகுதியில் மா்ம நபா்கள் தீ வைத்ததால் புகையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே பெரியகம்மியம்பட்டு என்ற இடத்தில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழித்தடத்தில் உள்ள தண்டவாளம் பகுதி அருகே மா்ம நபா்கள் வைத்த தீ பரவி மளமளவென எரிந்தது.
இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அந்த வழியாகச் சென்ற ரயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனா். தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
கந்திலி அருகே காட்டுத் தீ: கந்திலி அருகே காடு பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் செடி, கொடிகள் தீயில் எரிந்து சேதடைந்தன.
கந்திலி அருகே உள்ள சந்திரபுரம் காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்ட அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனா். சுமாா் அரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்தக் காட்டுத் தீயால் ஏராளமான செடி, கொடிகள், மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தொடர்புடையது

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


