வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

வழிபறியில் ஈடுபட்ட இருவா் கைது

வழிபறியில் ஈடுபட்ட இருவா் கைது

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 4:14 pm

வழிப்பறியில் ஈடுபட்ட இரு நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா், வாணியம்பாடி, பள்ளிகொண்டா பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் கைப்பேசி வழிபறி சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தது.

கடந்த வாரம் மின்னூா் கிராம நிா்வாக அலுவலா் பாபு தோ்தல் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, ஹெல்மெட் அணிந்து வந்த இரு இளைஞா்கள் அவருடைய கைப்பேசியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று தலைமறைவாகினா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பாபு ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் ஆம்பூா் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா மற்றும் சந்திப் என்பதும், அவா்கள் இருவரும் தொடா்ந்து கந்தனேரி, வடபுதுப்பட்டு , மின்னூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்களிடமிருந்து கைப்பேசியைத் திருடியது தெரிய வந்தது.

அதன்பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.