கடுமையான வெயில் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஆம்பூரில் பொது மக்களுக்கு குடிநீா் வழங்க 12 இடங்களில் குடிநீா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களாக திருப்பத்தூா் மாவட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 107.24 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடும் வெப்ப நிலை காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டும், பணி நிமித்தமாகவும், சொந்த வேலை காரணமாகவும் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு, ஆம்பூா் நகராட்சி சாா்பில் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, புதிதாக குடிநீா் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குடிநீா் பருகிவிட்டு பந்தலில் சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருவதை நகராட்சி ஆணையா் ப.சந்தானம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம் மற்றும் நகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

வெயில் தாக்கம் அதிகரிப்பு: மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு

தலைநகரில் குளிா் குறைந்து வெய்யில் அதிகரிப்பு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


