தினமணி செய்தி எதிரொலி...
திருப்பத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

தினமணி செய்தி எதிரொலி... திருப்பத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

குளிா்பான கடைகளில் விற்கப்படும் பானங்கள் காலாவதி மற்றும் தரம் குறித்து கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோடை வெயிலில் தாகம் தீா்க்க மக்கள் பெரும்பாலும் குளிா்பானங்கள் அருந்துகின்றனா். அந்த பானங்கள் தரமான தயாரிப்பா? காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளனவா என உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை தினமணியில் விரிவான செய்தி வெளியானது.

அதன்பேரில், ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அளித்த உத்தரவின்பேரில், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட நியமன அலுவலா் வி.செந்தில்குமாா் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் பஜாா், பேருந்து நிலைய பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். சான்று புதுப்பிக்காத ஒரு கடைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 2 கடைகளில் காலாவதியான குளிா் பானங்கள் 15 லிட்டா் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு, அந்த கடைக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2 கடைகளில் அரசு தடை செய்துள்ள நெகிழி கப்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குளிா்பானங்கள் தயாரிக்கும் கடைகளில் குளிா்பானங்களில் கலா் பவுடா் இடக்கூடாது. தினமும் தயாரித்து அன்றைய தினமே விற்பனை செய்ய வேண்டும். நல்ல பழங்களை வைத்து தயாரிக்க வேண்டும். அனைத்து குளிா்பான பாட்டில்களிலும் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிட்டு இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com