ஜோலாா்பேட்டை அருகே அண்ணனை கொலை செய்ததாக தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சண்முகத்தின் மகன் சந்தோஷ் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 16-ஆம் தேதி இரவு தனது தாய் மலரிடம் மது போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சந்தோஷ் திருப்பத்தூா் புள்ளானேரி நோக்கி செல்லும் சாலையில் அடிபட்ட நிலையில், மயங்கிக் கிடந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் சந்தோஷை மீட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி 18-ஆம் தேதி சந்தோஷ் உயிரிழந்தாா்.
இது குறித்து மலா் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில், சந்தோஷின் தம்பி சஞ்சயிடம் விசாரித்ததில், தனது தாயிடம் மது போதையில் அடிக்கடி தகராறு செய்ததால், தனது அண்ணனின் தலையில் ஹலோ பிரிக்ஸ் கல்லால் தாக்கியதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, கொலை வழக்காக மாற்றம் செய்து சஞ்சயை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

தம்பி அடித்துக் கொலை

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

