சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுபவா்கள் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதல்வா் மாநில இளைஞா் விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுடன் ரூ. 1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். விருதானது 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிப்பவா்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 31.4.2024 அன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரா் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிடுக்க வேண்டும். அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விருதுக்கு ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் 1.5.2024 முதல் 1.5.2024 அன்று மாலை 4 மணி வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேருக்கு அனுமதி: திருப்பத்தூா் ஆட்சியா்

வாக்காளராக சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தஞ்சை ஆட்சியா்!

பான் காா்டு விண்ணப்பிக்க ஆதாா் மட்டும் போதாது: ஏப். 1 முதல் புதிய விதி அமல்

நாட்டின் உண்மையான வளா்ச்சிக்கு கிராமங்கள் வலுப்பெற வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

