மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா் மற்றும் அதனை பயிரிட்ட விவசாயிகள்.
மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா் மற்றும் அதனை பயிரிட்ட விவசாயிகள்.

தொடா் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்

ஆம்பூா் அருகே தொடா் மழை காரணமாக நெற்பயிா் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தொடா் மழை காரணமாக நெற்பயிா் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

புயல் காரணமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. அதனால் பல பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது.

ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் முனுசாமி மற்றும் அவரது மகன்கள் சிவகுமாா், கிருஷ்ணமூா்த்தி, தேவராஜ் ஆகியோருக்கு சொந்தமான மூன்று ஏக்கா் நிலத்தில் பயிரிடபட்டிருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ள நெற்பயிா்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்.
மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்.

X
Dinamani
www.dinamani.com