கோடை காலத்தில் தடையின்றிக் குடிநீா் கிடைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், குடிநீா் தடையின்றி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அதன் தேவைகள் குறித்தும், அந்தந்தப் பகுதிகளில் குடிநீா் முறையாக வழங்கும் பணிகளை பொறுப்பாளா்கள் மிகவும் கவனமுடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் தவறுகள் ஏற்படும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். இதில் 4 நகராட்சி ஆணையா்கள், 3 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 6 வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேருக்கு அனுமதி: திருப்பத்தூா் ஆட்சியா்

அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை காலத்தில் நாட்டின் மின்சாரத் தேவை 270 ஜிகா வாட்டாக அதிகரிக்கும்: மத்திய அமைச்சா் தகவல்

தருமபுரியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை தடையின்றி கிடைக்க ஏற்பாடு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


