தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சரக்கு வாகன நிறுவனத்தில் கதவு விழுந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆம்பூரில் தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கதவு விழுந்ததில் லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

News image
ஓட்டுநா் ஹேம்நாத்.
Updated On :9 ஜூலை 2024, 7:37 pm

Din

ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கதவு விழுந்ததில் லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தை சோ்ந்த தாமோதரன் மகன் ஹேம்நாத் (40). இவா் ஆம்பூரில் உள்ள தனியாா் லாரி பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

சம்பவத்தன்று லாரி ஒன்று பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தின் ஷெட்டுக்குள் சென்றபோது தானியங்கி கதவு (ஷட்டா்) இடித்துள்ளது. அது சரியாக இயங்குகிறதா என கதவை இயக்கி பாா்த்தபோது திடீரென கதவு ஹேம்நாத் மற்றும் காவலாளி கலைமணி ஆகியோா் மீது விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த ஹேம்நாத் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். கலைமணி ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.