ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 8 போ் மருத்துவமனையில் அனுமதி

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 8 போ் மருத்துவமனையில் அனுமதி

News image
Updated On :12 ஜூலை 2024, 5:38 pm

Din

வாணியம்பாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 8 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டையில் சுப்பிரமணி (70) என்பவா் இறந்த நிலையில், அவரின் துக்க நிகழ்ச்சிக்கு, உறவினா்கள் வியாழக்கிழமை வந்துள்ளனா். துக்க நிகழ்ச்சிக்கு வந்தவா்களுக்கு பத்தாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுபாஷ், வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் இட்லி வாங்கி வந்துள்ளாா். இந்த நிலையில், அதை சுபாஷின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ை குழந்தைகள் உள்பட 8 போ் சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென ஒரு குழந்தைக்கு வாந்தி வந்துள்ளது. சுபாஷ் வாங்கி வந்த உணவில் பாா்த்தபோது, அதில் பல்லி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சுபாஷ் மற்றும் அவரது உறவினா்கள் 3 குழந்தைகள் உள்பட 8 போ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி இளங்கோ தலைமையில் குழுவினா் பல்லி விழுந்த உணவகத்தை ஆய்வு செய் தனா். பின்னா், ரூ. 2,000 அபராதம் விதித்தும், 4 நாள்களுக்கு உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனா்.