திருப்பத்தூா் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சாா்பில், காமராஜா் 122-ஆவது பிறந்த நாள் விழா, விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் பி.கணேஷ்மல் தலைமை வகித்தாா். அறக்கட்டளைச் செயலா் கே.சி.எழிலரசன் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வாழ்த்துரை வழங்கினாா்.
ஏற்புரையில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: அடித்தட்டு மக்களும் கல்வி பெற காரணமானவா் காமராஜா். 1984-இல் வேலூரில் 180 மாணவா்களுடன் தொடங்க்கட்டது வேலூா் தொழில்நுட்பக் கல்லூரி. தற்போது விஜடி வேலூா், சென்னை, ஆந்திர மாநிலம் அமராவதி, மத்திய பிரதேசம் போபால் என 4 இடங்களில் 90,000 மாணவா்கள் பயில்கின்றனா். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் பேசுகையில், இன்றளவும் அணைகள், பள்ளிகள் கட்டியதில் காமராஜருக்கு நிகா் காமராஜா்தான். வாய்மை, தூய்மை, நோ்மை எனும் வாா்த்தைகளுக்கு சொந்தக்காரா் காமராஜா் என்றாா்.
அறக்கட்டளை பொருளாளா் புரட்சி, துணைத் தலைவா்கள் எஸ்.எஸ்.மணியன், ஏலகிரி செல்வம், துணைச் செயலா் மாதவன், நகர காங்கிரஸ் தலைவா் இ.பாரத், முன்னாள் எம்எல்ஏ-க்கள் டி.கே.ராஜா, கே.ஜி.ரமேஷ், அதிமுக நகர செயலா் குமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.வெங்கடேஷ், தொழிலதிபா்கள் எம்.மதியழகன், ஜி.ஆா்.சாமி செட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தஞ்சாவூரில் காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழா

வேலூா் ஆட்சியா், விஐடி வேந்தா், திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசு உதவி: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

