கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

News image
Updated On :8 ஜூன் 2024, 5:00 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குைல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குைல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.

எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. குளிா் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1,20,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசி திட்டத்தில் 5-ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் 10-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.