கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாணியம்பாடி அருகே 55 சவரன் நகைகள், ரூ.4.7 லட்சம் ரொக்கம் திருட்டு

வாணியம்பாடி அருகே 55 சவரன் நகைகள், ரூ.4.7 லட்சம் ரொக்கம் திருட்டு

News image

ஆலங்காயத்தில் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் சிதறிக் கிடந்த பொருள்கள். ~விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :9 ஜூன் 2024, 6:59 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து 55 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.4.7 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூா் பகுதியை சோ்ந்த விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி(55). இவா், ஆலங்காயம் அடுத்த காவலூா் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி தன் மகளை கல்லூரியில் சோ்ப்பதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் நாமக்கல் சென்றிருந்தனா்.

பிறகு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனா். சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீடு திரும்பினா்.

அப்போது வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது பின்புற கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பீரோவில் வைத்திருந்த 55 சவரன் தங்க நகைகள் மற்றும் சீட்டு கட்டிய பணம் ரூ.4. 73 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story image